திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்...
மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனது ஆழ்வார்பேட்டை இல்லதிற்கு சென்ற நிலையில் தற்போது மீண்டும் கோபாலபுரம் வருகை தந்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழுவும் கோபாலபுரம் வருகை தந்தனர்.
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். நேற்றைவிட கலைஞருக்கு இன்று நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது ஏராளமான திமுக தொண்டர்கள் பெரும் பதட்டத்துடன் கோபாலபுரம் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.