திமுக தலைவர் தேர்வு! - 28ல் பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு!

திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28ல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 28.08.18 அன்று காலை 9.00 அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

K. Anbazhagan mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe