dmk leader arrested police egmore court bail

Advertisment

சென்னையில் கைதான தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

BAIL

Advertisment

தகவலறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியைப் பார்க்க அனுமதிக்கக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BAIL

இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி எனது மகன் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். எனக்கு இருமல், சளி இருக்கிறது; எனவே கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

Advertisment

BAIL

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் கைது செய்ய முடியாது என வாதிட்டோம். ஜூன் 1- ஆம் தேதி சரணடைந்து வழக்கமான ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி கூறினார்" என்றார்.