மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்!

DMK condemning the central govt for fisherman issue

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ராமேஸ்வரத்தில் இன்று (11.02.2024) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது.

எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்” எனதெரிவிக்கப்பட்டிருந்தது.

fisherman Rameshwaram
இதையும் படியுங்கள்
Subscribe