Advertisment

திமுக கூட்டணி! - ராகுலுக்கு சோனியா அட்வைஸ்! 

ddd

Advertisment

திமுக - காங்கிரசுக்கு இடையே நடக்கும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். குறைந்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்க காங்கிரசிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தியதில் நொந்துபோனது காங்கிரஸ் தலைமை. இதனால் அடுத்தக் கட்ட முடிவு எடுப்பதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (05.03.2021) சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. திமுக தங்களை நடத்திய விதம் குறித்து ஆதங்கத்துடன் கண்ணீர் மல்க, கே.எஸ். அழகிரி சொன்னதில் ஆடிப்போனது செயற்குழு!

ddd

குறைந்த இடங்களில் போட்டியிடுவதை விட, தனித்துக் களமிறங்கி தன்மானம் காப்போம்; கூட்டணி வேண்டாம் என ஏகத்துக்கும் குரல் கொடுத்தனர் மாவட்டத் தலைவர்கள். அவர்களை மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லியும், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் சமாதானப்படுத்தினர்.

Advertisment

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழுவில் எழுந்த குரல்கள் குறித்து சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றப.சிதம்பரம், “தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் அது பாஜக ஆட்சி அமைந்ததற்கான அத்தாட்சி. அதை தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு இருக்கிறது. குறைந்த சீட்டுகளாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதிசெய்ய வேண்டும். சூழல்கள் தெரியாமல் திமுகவை விமர்சிப்பது தவறானதாகிவிடும்” என்று சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ராகுலுக்கு சில அட்வைஸ் கொடுத்துள்ளார் சோனியா காந்தி. இதனால் சோனியாவுக்கும் ராகுலுக்கும் முரண்பாடுகள் எழுந்துள்ளதாம் என்கிறது காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள்.

congress tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe