DMK AIADMK direct competition in which constituencies?-List released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisment

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் திமுக வெளியிட்ட பட்டியலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில்,அதிமுக - திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி

  • தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக), ஜெயவர்தன்(அதிமுக)
  • வடசென்னை - கலாநிதி வீராசாமி (திமுக), ராயபுரம் மனோ (அதிமுக),
  • சேலம் - டி.எம்.செல்வகணபதி (திமுக), விக்னேஷ்(அதிமுக)
  • ஈரோடு - பிரகாஷ்(திமுக), ஆற்றல் அசோக்குமார்(அதிமுக)
  • அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக), ஏ.எல்.விஜயன்(அதிமுக),
  • ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக), கஜேந்திரன்(அதிமுக)
  • காஞ்சிபுரம் (தனி) - செல்வம் (திமுக), ராஜசேகர்(அதிமுக),
  • தேனி- தங்க தமிழ்ச்செல்வன்(திமுக), நாராயணசாமி(அதிமுக),

என எட்டு தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் பட்சத்தில்திமுக - அதிமுக நேரடி போட்டி தொகுதிகள்மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment