Advertisment

தே.மு.தி.க.வுக்கு..? ஆம்... த.மா.கா. இருக்குது... நழுவிய செங்கோட்டையன்!

அதிமுகவில் சீனியர் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால் இவர் கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் இவரைப் பற்றி பேசும்போது கழுவுற மீனில் நழுவுற மீன் நம்ம அண்ணன் செங்கோட்டையன் என்று தான் நகைச்சுவையாக பேசுவார்கள். அதுபோல்தான் பெரும்பாலான அரசியல் கேள்விகளை தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக தனது துறை சம்பந்தமாக கருத்துக்களை கூறி விட்டு செய்தியாளர் சந்திப்பில் வணக்கம் போட்டு வேகமாகச் செல்வது இவரது வழக்கம்.

Advertisment

minister

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்படித்தான் இன்று கோபிசெட்டிபாளையத்தில் அரசு சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பத்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பத்திரங்களை வழங்கிய செங்கோட்டையன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த ஆட்சியில் கல்வித்துறை மிகவும் புரட்சிகளை செய்து வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை கிராம ஊராட்சி முதல் பேரூராட்சி வரை கொடுத்து வருகிறோம் என பட்டியல் போட்டுக் கொண்டே வந்தார்.

இறுதியாக ஒரு நிருபர், சார் உங்க கூட்டணியில் தேமுதிக இருக்குதா...? என்றார். அப்போது அந்த கேள்வியை கண்டுகொள்ளாததுபோல் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்றார். மீண்டும் அந்த நிருபர், சார் தேமுதிகவுக்கு மாநிலங்கவை.... என கேள்வியை எழுப்பியபோதே, மத்தியில் நமது எம்பிக்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள், மாநிலத்திலும் நமது எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை செய்கிறார்கள் என்றார்.

விடாத கருப்பாக பிறகும் அந்த நிருபர், சார் கூட்டணியில் தேமுதிக இருக்குதா...? என்றார். அதற்கு அவர், ஆம் நமது கூட்டணியில் த.மா.கா. இருக்கிறது என்று கும்பிடு போட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார். இதைக்கண்ட அங்கிருந்த நிர்வாகிகள் எல்லோரும் குபீரென்று சிரித்து அவர்களும் பின்தொடர்ந்து வேகமாக சென்றனர்.

ஆம் கட்சிக்காரர்கள் கூறுவதுபோல சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் தான்..!

K. A. Sengottaiyan dmdk Rajya Sabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe