சசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்!!!

amit shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த ஜெயானந்த்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் அமித்ஷா.

amit shah

அதில், ''டாக்டர் ஜெயானந்த் திவாகரன்ஜி,என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தாங்கள் அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற தங்களுடைய அன்பும் நம்பிக்கையுமே, என் பாதையில் பயணிப்பதற்கு எனக்கு உறுதுணையாக உள்ளது. மனதாரச் சொல்லப்பட்ட தங்களுடைய வார்த்தைகள், மக்களுக்கு மேலும் சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த வாழ்த்திற்காக என் இதயத்திலிருந்து மகிழ்ச்சியுடன், என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

அமித்ஷா" இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.

Amit shah divakaran jaiananth sasikala
இதையும் படியுங்கள்
Subscribe