/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shankar_0.jpg)
கடந்த 2010ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அப்போது, 1996 - லேயே ’இனிய உதயம்’ இதழில் நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’ஜூகிபா’ என்ற கதையைத் திருடித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என ஆரூர் தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், 27.04.2018க்குள் சாட்சியங்கள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், இயக்குநர் ஷங்கருக்கு பதிலாக அவர் உதவியாளர் யோகேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வருகை தந்தார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில், கதைத் திருட்டுப் புகாருக்கு இயக்குநரான ஷங்கர்தான் பதிலளிக்க முடியும். அவர் கதையை திருடவில்லை என்று மூண்றாவது நபர் சாட்சி சொல்ல சட்டத்தில் இடமில்லை என மனுதாரர் தரப்பு வாதிட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 26ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று இயக்குநர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராவாரா என ஊடகங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)