thayalu

Advertisment

திமுக தலைவர் கலைஞரை சந்திக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10வது நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்முறையாக காவேரி மருத்துவமனைக்கு முதல்முறையாக தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார். கலைஞர் பயன்படுத்திய அதே காரிலும், வீல் சேரிலும் தயாளு அம்மாள் மருத்துவமனை அழைத்து வரப்பட்டார்.