ADVERTISEMENT

 ’நான் 6 ஓட்டு போட்டேன்;நான் 4 ஓட்டுதான் போட்டேன்’-விஸ்வரூபம் எடுக்கும் நத்தமேடு  கள்ள ஓட்டு விவகாரம்

03:00 PM Apr 19, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நடந்து முடிந்த தேர்தல் வாக்குப்பதிவில் நத்தமேடு கள்ள ஓட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ADVERTISEMENT


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு பகுதியில் வாக்குப்பதிவில் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை கள்ள ஓட்டுகளாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு பணியில் இருந்த வெளிமாநிலத்தை சேர்ந்த பாதுகாவலர், தனது அனுபவத்தில் இதுபோன்ற மோசமான வாக்குச்சாவடியை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு கள்ள ஓட்டுகள் போப்பட் டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றனர்.

கள்ள ஓட்டு போட்டது குறித்து வாக்குச்சாவடியின் வாசலில் நின்ற இளைஞர்கள், நான் 6 ஓட்டு போட்டு 6 ஆயிரம் வாங்கிக்கொண்டேன். நான் 4 ஓட்டு போட்டுதான் போட்டேன் என்று பேசிக்கொண்டதை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் இருந்துள்ளதாக தகவல்.

வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாமல் பூத் சிலிப் மட்டும் வைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் வாக்களித்துள்ளனர்.


இது குறித்த புகார்கள் எழுந்ததும், கண்காணிப்பு கேமராவில் அனைத்தும் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையத்திற்கும் இந்த சம்பவம் குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கள்ள ஓட்டுகள் விவகாரத்தால் திமுக உள்ளிட்ட சில கட்சியினர் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT