Advertisment

பட்டாசில்லா தீபாவளி??? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

crackers

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்க இருக்கிறது உச்சநீதிமன்றம்.

Advertisment

தீபாவளி அன்று மிக அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அதிகளவில் ஏற்படுகிறது, இதனால்ஆரோக்கியத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கவேண்டும் என பல்வேறு மனுக்கள் போடப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது நீதிமன்றம்.

Advertisment

இந்த விஷயத்தில் மக்களின் நம்பிக்கை, பட்டாசு தொழிலை ஆதாரமாக கொண்டிருக்கும் குடும்பங்கள் உள்ளிட்டவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என தீர்ப்பை அக்டோபர் 23 தேதிக்கு ஒத்திவைத்தது. பட்டாசுக்கு தடைவிதித்தால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும், கிட்டதட்ட 6000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததாக கூறினர், அதேநேரத்தில் நாம் சுற்றுச்சூழலையும் கருத்தில்கொள்ள வேண்டும். உடல்நிலை பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கக்கூடியது இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஒருபுறம் சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மறுபுறம் நம்பிக்கை, பொருளாதாரம், வாழ்வாதாரம் இப்படி இக்கட்டான சூழலில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது உச்சநீதிமன்றம்.

crackers diwali Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe