delhi prime minister house cabinet meeting

Advertisment

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், பொருளாதாரம் உள்ளிட்டவைகுறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

delhi prime minister house cabinet meeting

மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 1- ஆம் தேதி) நடைபெற்ற நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகக் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.