டேனிஷ் சித்திகி மரணம்..! “பயங்கரவாதத்தை தவிர்க்க வேண்டும் என உலகிற்கு உணர்த்துகிறது..” - மு.க.ஸ்டாலின் இரங்கல்..

Danish Siddiqui dies ..!

இந்தியாவை சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திகி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றி வந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்தநாட்டு ராணுவத்திற்கும், தாலிபன்களுக்கும் கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், டேனிஷ் சித்திகி ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி அந்த மோதல்களை பதிவு செய்து வந்தார். இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.

இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டேனிஷ் சித்திகியின் அகால மரண செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தனது கேமரா லென்ஸ் மூலமாக தொற்றுநோய்கள், படுகொலைகள் மற்றும் நெருக்கடிகளின் பேரழிவு ஆகியவற்றை நமக்கு தெரியப்படுத்தியவர். அவரது மரணம், எந்த வகையான வன்முறை மற்றும் பயங்கராவதத்தை தவிர்க்க வேண்டும் என உலகிற்கு உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Afganishtan mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe