Advertisment

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை!

dddd

Advertisment

டாஸ்மாக் கடைகளுக்கு 25.11.2020 அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சிஐடியுவின் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நிவர் புயல் காரணமாக 25.11.2020 அன்று அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்திருப்பதாகவும், நிலைகேற்ப விடுமுறை நீடிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த பொதுவிடுமுறையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை குறித்து எந்தவித அறிவிப்பும் நிர்வாக தரப்பில் வெளியிடததால் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்றைய தினத்திலிருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நிவர் புயல் கரையை கடக்கும் போது கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கடலோர மாவட்டங்களை மட்டுமல்லாமல் உள்மாவட்டங்களையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துக்கூடிய பேராபத்து உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் கடை ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது"இவ்வாறு கூறியுள்ளார்.

cyclone rain leave tasmac shop
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe