Advertisment

என்.எல்.சி நிறுவனம் 2025-க்குள் 4750 மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி மின் திட்டங்களை நிறைவேற்றும் - என்.எல்.சி தலைவர் அறிவிப்பு! 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 73 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராகேஷ்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற அணி வகுப்பினை ஏற்றுக்கொண்டார்.

Advertisment

பின்னர் என்எல்சி இயக்குனர் ராகேஷ் குமார் பேசுகையில், "3740 மெகாவாட்டாக இருந்த என்.எல்.சி நிறுவனத்தின் மின் உற்பத்தி அளவு, கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்து, அனல் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் உட்பட 5190 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

p

புதிய திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியின் அறிகுறியாக கருதப்படுகிறது. அந்த வகையில் நமது நிறுவனம் ஒரு ஆண்டில் ரூ. 7208 கோடிக்கும் அதிகமான புதிய திட்டங்களில் முதலீடு செய்து சாதனை படைத்துள்ளது. இதன்படி புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் நமது திறனை குறிக்கும் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம், கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் தேசத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களுக்கு 100 நாட்களில் ஒப்புதல் வழங்கும் மாபெரும் சிறப்பு திட்டங்களை, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அறிவித்துள்ளார்.

Advertisment

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி திறமையான தலைமையின் கீழ், மத்திய நிலக்கரி அமைச்சக செயலாளர் சுமந்தா சவுத்ரியின் சிறப்புமிக்க வழிகாட்டுதலின்படி அனைவரும் இந்த சீர்திருத்தத்திற்கு திட்டத்தின் கீழ் அமைக்கும் புதிய திட்டங்களை இறுதி செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் .

கடந்த நிதியாண்டில் துணை நிறுவனங்களின் வர்த்தகம் உட்பட ரூ 9871 கோடிக்கு என்.எல்.சி நிறுவனம் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. அதுபோன்று துணை நிறுவனங்கள் செயல்பாடுகள் சேர்த்து ரூ 2561 கோடியை வரிக்கு முந்தைய லாபமாகவும், ரூ 1537 கோடியை வரிக்குப் பிந்திய லாபமாகவும் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் சமூக பொறுப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் 53 கோடியே 15 லட்சம் நாம் வழங்கி உள்ளோம். இவ்வாண்டு சமூக பொறுப்பு பணிகளில் குறிப்பாக கல்வித் துறை சார்பான பணிகளில் சில நிரந்தர நடவடிக்கை செயல்படுத்தி உள்ளோம். அதன்படி கல்வி நிலையங்கள் எதிர்காலத்தில் படிப்படியாக சுயமாக இயங்க வழிவகை செய்யும் செயல் நடைமுறைகளும் மேற்கொண்டுள்ளோம். இதனால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இதர முக்கியமான துறை சார்ந்த பணிகளில் நாம் அதிகமாக கவனம் செலுத்த முடியும்.

இந்திய அரசின் தேசிய சூரிய ஒளி மின் திட்டம் மற்றும் பசுமை மின்சக்தி முயிற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், என்.எல்.சி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் 4750 மெகாவாட் அளவிற்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் மின் திட்டங்களை நிறைவேற்ற இலக்குகளை நிர்ணயத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நமது நிறுவனம் ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையை எட்டியுள்ளது " என்றார்.

இந்நிகழ்ச்சியில் என் எல்.சி அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் என 5000-த்திற்கும் மேற்டோட்டோர் கலந்து கொண்டனர்.

nlc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe