BJP rule in Tamil Nadu

Advertisment

கடலூரில் நேற்று (18.22.2020) வேல் யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நகரில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை கடலூரிலுள்ள ஒரு தனியார் உணவகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்ட வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, "தமிழகத்தில் இதுவரை காணாத திருப்பத்தை பா.ஜ.க. கொண்டு வரும். 2021-ல் பாஜகவின் மிகப்பெரிய வெற்றி உள்ளது. எமன் கதைவை தட்டி அதனை தாண்டி கடலூர் வந்துள்ளேன்.

எந்த தடை வந்தாலும் 07-ஆம் தேதி வரை வேல்யாத்திரை தொடரும். பா.ஜ.க குரல் இல்லாமல் தேர்தலில் மக்கள் ஏதும் செய்ய இயலாது. தமிழக மக்களே புரிந்து கொள்ளுங்கள். இதுதான் ஆரம்பம், பா.ஜ.க ஆட்சி தமிழகத்தில் அமையும்.

Advertisment

50 ஆண்டுகள் ஆட்சி என பொதுவாக காங்கிரஸ் ஆட்சியை தான் குறிப்பிடுகின்றோம். அனைவரும் பா.ஜ.கவை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, தெரியும் பா.ஜ.கவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று. தமிழகம் இதுவரை பார்க்காத திருப்புமுனையை பார்க்கப் போகிறது. இதுவரை திராவிட கட்சிகளை தாண்டி வேறு எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது கிடையாது என்று சொல்லும் போது ஒரு மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்தியா முழுவதும் நல்லது செய்யும் மோடிக்கு தமிழக மக்களுக்கு நல்லது செய்ய தெரியாதா? நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறார். நல்ல திட்டங்கள் கொண்டு வரும்போது தமிழக மக்களுக்கும் சேர்த்துதான் கொண்டு வருகிறார். தமிழகத்தில் வாழ்கின்ற மக்கள் மீது நம்பிக்கை கொண்டவர் பிரதமர் மோடி" என்று கூறினார்.