தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இதில் 180 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.