coronavirus peoples residence notice pasted supreme court

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 'தனிநபரின் விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டுவது அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. தனிநபரின் விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும்போது, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநில அரசுகளின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நவம்பர் 5- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.