கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைசெயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

coronavirus issues cm palanisamy discussion

மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.