Puducherry

Advertisment

கரோனாவைக் கட்டுப்படுத்த நிதியையும், உபகரணங்களையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் இன்று (நேற்று) 3 பேர் கரோனா வைரஸ் தொற்றுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் 33 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கரோனா வைரசால்11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டால் விரைவில் குணமடைந்து விடுகின்ற்னர். முதியோர் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க நேரிடுகின்றது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளிநாட்டில்இருந்து யார் வந்தாலும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா நோய்த் தொற்று வரும் மாதங்களில் இன்னும் அதிகளவு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒருபுறம் கரோனாவைக் கட்டுப்படுத்தவும், இன்னொருபுறம் பொருளாதாரம் மேம்படவும் உதவ வேண்டும். ஆனால் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. மாநில அரசுக்குத் தேவையான நிதி உதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். மத்திய நிதி அமைச்சர் பல்வேறு நிதி ஆதாரங்களை வெளியிட்டார்கள். மத்திய அரசு அறிவித்துள்ள வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. ஊரடங்கு முடிவுற்ற பின் எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு சிந்திக்கவும் இல்லை, முடிவெடுக்கவும் இல்லை.

எனவே கரோனா நோயைக் கட்டுப்படுத்த மாநிலத்திற்குத் தேவையான நிதியையும், மருத்துவ உபகரணங்களையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்றார்.