ஒரே பெயர் கொண்ட இருவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரைத் தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆந்திர மருத்துவர்கள்.

Advertisment

corona confussion in andhra

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,800 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே பெயர் கொண்ட இருவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரைத் தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆந்திர மருத்துவர்கள்.

Advertisment

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்காக ஒரே பெயரைக் கொண்ட இருவர் வந்துள்ளனர். இதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு கரோனா இல்லை எனச் சோதனை முடிவுகள் வந்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் கரோனா உள்ளவரிடம், அவருக்கு கரோனா இல்லை எனக் கூறி, அம்மாநில அரசு அறிவித்த 2000 ரூபாய் உதவித்தொகையை கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

http://onelink.to/nknapp

பின்னர் தவறு நடந்திருப்பதை உணர்ந்த மருத்துவர்கள், கரோனா தொற்று உள்ள நபரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து நடந்தவற்றைக் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபர் மீண்டும் மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். அதன் பின்னர், நடந்த விவரங்களைப் போலீஸாருக்குத் தெரிவித்த மருத்துவர்கள், போலீஸாரின் உதவியோடு அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி என்.ஆர்.ஐ மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் குழப்பம் காரணமாகத் தொற்று இருப்பவரின் வீட்டில் உள்ள மேலும் 4 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment