காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!

Congress MP Vasantha Kumar passes away

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின்மக்களவை உறுப்பினருமானவசந்தகுமார் காலமானார்.அவருக்கு வயது 70.

கடந்த 9ஆம் தேதி கரோனாஉறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு சிகிச்சையின் பின் காரோனாநெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்தற்போது அவர் காலமானார்.

தொழிலதிபர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் வசந்தகுமார். கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் 1950,ஏப்ரல் 14 ஹரிகிருஷ்ணபெருமாள், தங்கம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் வசந்தகுமார். அவருக்குகாங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உட்பட ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் இருந்து 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்கு வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 நாங்குநேரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வெற்றி பெற்றார். 2019 -இல் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளாஎன64 கிளைகளுடன் வசந்த் அன்கோ என்ற நிறுவனத்தைஅமைத்துள்ளார்.

வசந்தகுமாரின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

h. vasanthakumar passes away
இதையும் படியுங்கள்
Subscribe