Congress criticizes PM Modi for God remark

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து நாட்டில் பிரபலமான நபர்களிடம் நேரடியாக உரையாடி வருகிறார். லட்சக்கணக்கில் ரசிகர்கள் கொண்ட அவரது நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில், தனது குழந்தை பருவம் முதல் அரசியல் பயணம் வரை தனது வாழ்க்கையின் நடந்த பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

Advertisment

அதன்படி, குஜராத் முதல்வராக இருந்த காலத்தை நினைவுக் கூர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நான் முதல்வராக பதவியேற்றபோது, ​​மூன்று உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டேன்: எனது முயற்சிகளில் எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டேன், எனக்காக எதையும் செய்ய மாட்டேன், நான் மனிதன் - நான் தவறு செய்யலாம், ஆனால் நான் கெட்ட நோக்கத்துடன் தவறு செய்ய மாட்டேன். இந்தக் கொள்கைகளே எனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக மாறியது. நான் உட்பட அனைவரும் தவறு செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு மனிதன். ஏதோ கடவுள் இல்லை” என்று கூறினார்.

Advertisment

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, கடவுள் தன்னை அனுப்பியதாகக் கூறினார். இது குறித்து அப்போது அவர் தெரிவிக்கையில், “என் அம்மா உயிருடன் இருக்கும் வரை, நான் உயிரியல் ரீதியாக பிறந்தேன் என்று நினைத்தேன். அவர் மறைவுக்குப் பிறகு, என் அனுபவங்களைப் பார்க்கும்போது, ​​நான் கடவுளால் அனுப்பப்பட்டவன் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த வலிமை என் உடலில் இருந்து இல்லை. அது எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. அதனால்தான் கடவுள் எனக்கு இதைச் செய்வதற்கான திறனையும், வலிமையையும், தூய்மையான மனதையும், உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

தேர்தலுக்கு முன்னதாக, கடவுள் தன்னை அனுப்பியதாகக் கூறிய பிரதமர் மோடி, இப்போது தான் கடவுள் இல்லை என்று மாற்றி மாற்றி பேசுகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

Advertisment