Advertisment

சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொடூரமாக குத்திக்கொலை!

kknagar

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில், அஸ்வினி என்ற மாணவி கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் குத்தினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி அஸ்வினியை அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

kknagar

இதனிடையே, மாணவியை குத்திவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது, அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை லாபகமாக பிடித்து அடித்து கை, கால்களை கட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Advertisment

kknagar

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக, அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி அஸ்வினி கல்லூரி வாசலில் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சக கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

college student murder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe