Advertisment

காடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்!!! அமைச்சர் வேலுமணி காரணமா???

கோவையில் காடுகளை அழிக்கும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய கட்டுமான பணிகளை கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி எந்த ஒரு அனுமதியுமில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை மேற்கொள்வதால் அங்குள்ள வனவிலங்குகளும், காடுகளும் அழியும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisment

kovai

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துரை கிராமம், காளிமங்கலம் பகுதி, கோவை வனக்கோட்டம், போளுவாம் பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மாவட்ட சுற்றுசூழல் கமிட்டி மற்றும் மலையிட பாதுகாப்பு குழுவினால் (HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யானைகள் மற்றும் சிறுத்தைகளின் பிரதான வாழ்விடமாகவும், நொய்யலாற்றின் நீராதார பகுதிகளாகவும் விளங்குகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இண்டஸ் பொறியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து கடந்த 2014ம் ஆண்டில் சீல் வைக்கப்பட்டது.

சூழலியல் ரீதியாக மிக முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வெளியில் தெரியாமல் ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை எந்த ஒரு அனுமதியுமில்லாமல் கட்டி வருவது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மூடப்பட்டது தெரிந்தும், எந்த ஒரு அனுமதியுமில்லாமல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சுமார் 600 வீடுகளை இங்கு வனத்தை ஒட்டி கட்டுவதன் மூலம் யானைகள் வாழ்விடம் மற்றும் இடம்பெயர்தால் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி வனமும் அழியும் சூழல் உருவாகியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் வருகிறது. இது அமைச்சர் வேலுமணியால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கிராம மக்களின் எதிர்ப்பையும்மீறி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisment

ஏற்கனவே போளுவாம்பட்டி வனச்சரகத்தை ஒட்டித்தான் காருண்யா, சின்மயா, ஈசா யோகமையம், உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளன. தற்போது அவர்களை காப்பாற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்கின்றனர் கோவையை சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகள்.

-சிவா

Coimbatore kovai s.p.velumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe