தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை (24/06/2020) காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கரோனா தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது, முழு பொதுமுடக்கம் உள்ளிட்டவைபற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஏற்கனவே ஜூன் 30- ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் உள்ளது. மதுரையில் நாளை முதல் ஜூன் 30- ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.