சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும்,சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும்தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

cm palanisamy dgp tripathy and chennai police commissioner akviswanathan meet

இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.