Advertisment

CM MK Stalin says Tamil Nadu is not just a name but an identity

தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது நமது அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் திருத்த மசோதா - 2025 தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் சமூக வலைத்தளப்பதிவில், “வழக்கறிஞர்கள் திருத்த மசோதா- 2025 சட்டத்துறையினரின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும். கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மத்திய பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தைத் திட்டமிட்டுக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தி வருகிறது.

முதலில் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பு செய்யத் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ( NJAC - National Judicial Appointments Commission) மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது, ​​பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத் தொழிலின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புவதால், பாஜகவின், “தமிழ்’ மீதான வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது நமது அடையாளம். இந்த வரைவு மசோதாவிற்கு எழுந்த தன்னிச்சையான போராட்டங்களும், கடும் எதிர்ப்பும் மத்திய அரசை அதைத் திரும்பப் பெறக் கட்டாயப்படுத்திய போதிலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாதம் கண்டிக்கத்தக்கது. இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கோருகிறது. மேலும் சட்டத் தொழிலின் சுயாட்சியை மதிக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.