Advertisment

முதல்வர் அலுவலகத்துடன் மோதும் தலைமைச் செயலாளர்? 

ddd

Advertisment

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பெயரளவிற்குத்தான் தலைமைச் செயலாளராக இருக்கிறார். உண்மையானத் தலைமைச் செயலாளர், ஐ.ஏ.எஸ்கிரேடில் உள்ளமுதல்வரின் செயலாளர்தான். சமீபத்தில் டி.ஆர்.ஓஅந்தஸ்தில் இருந்த பலர் ஐ.ஏ.எஸ்அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றார்கள்.

அப்படி பதவி உயர்வுபெற்ற 16 பேரில் சிலர் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அப்படி பெரிய பதவிகளில் நேரடி ஐ.ஏ.எஸ்இல்லாத அதிகாரிகளை நியமிக்க மாட்டார்கள்.

இப்படி வரம்பு மீறி பதவிகள் வழங்கப்படுவதற்கு காரணம், இவர்தான் என ஐ.ஏ.எஸ்வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தப் பதவிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கைமாறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வரும் வாரம் துறைச் செயலாளர்களின் பதவி மாற்றம் நடைபெறுகிறது. அதற்காக,முதல்வர் அலுவலகத்தில்கோடிக்கணக்கில் வசூல் நடைபெற்று வருகிறது.

Advertisment

முதல்வர்செயலாளரின் இந்தச்செயல்களால் தலைமைச் செயலாளர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து இரண்டு முறை பதவி நீட்டிப்பு பெற்றுள்ள தலைமைச் செயலாளர் ஒய்வு பெற்றவுடன் மத்திய அரசின் தீர்ப்பாயங்களில் தலைவராகப் போவதற்குத்திட்டமிடுகிறார். அவருடைய சேவையை மத்திய அரசு விரும்புகிறது என்கிறார்கள், மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Chief Secretary tnassembly
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe