Skip to main content

Exclusive : உதயநிதிக்கு கைமாறும் முதல்வரின் துறை

 

 The Chief Minister's Department is handed over to Udayanidhi

 

'உதயநிதி 14 ஆம் தேதி அமைச்சராகிறார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்படுகிறது' என நக்கீரன் முதலில் செய்தி வெளியிட்டது. அது முக்கியத்துவம் இல்லாத துறை என  அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்க திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன்படி முதல்வரிடம் இருக்கும் ஒரு துறை உதயநிதிக்கு வழங்கப்படுகிறது. அந்தத் துறை சிறப்பு செயல்திட்ட அமலாக்கத்துறை. தமிழகத்தில் அமலாக்கப்படும் திட்டங்கள் பலவற்றை முதல்வர் சிறப்பு செயலாக்க திட்டத்துறை மூலமாகத்தான் நடைமுறைப் படுத்துகிறார்.

 

இந்தத்துறை, அனைத்து அமைச்சர்களும் சிறப்பு திட்டத்தை நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கும் துறை. முதல்வரிடம் இருக்கும் இந்தத் துறையின் செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் இருக்கிறார். உதயநிதியிடம் வரும் இந்தத் துறையின் செயலாளராக தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கக்கூடிய ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட இருக்கிறார். இவரை முதல்வரின் செயலாளர் உதயசந்திரன் பரிந்துரைத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !