Advertisment

மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி

ddd

Advertisment

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் அமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடலிறக்க சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சைக்கு முன்பு நடந்த பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வாக்களித்துவிட்டு சேலத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கரோனா பரவல் இரண்டாவது அலை தற்போது உள்ளதால், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பானஆலோசனைக்கு சென்னைக்கு வந்திருந்தார். நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

admk Edappadi Palanisamy eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe