Advertisment

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

Chhattisgarh Chief Minister Vishnu Deo Sai

Advertisment

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய் பதவியேற்க உள்ளார். சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாய் முதல்வராகத்தேர்வு செய்யப்பட்டதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக விஷ்ணுதேவ் சாய் பணியாற்றியவர் ஆவார். அதே சமயம் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் முதல்வரைத்தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

chattishghar
இதையும் படியுங்கள்
Subscribe