சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியைத்தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இடத்தைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தைக் கேட்டறிந்த நிலையில் நிலத்தைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் இடத்தைக் கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசு கூறியுள்ளது.