Advertisment

முழு ஊரடங்கு - சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

படங்கள்: அசோக்குமார், ஸ்டாலின், குமரேஷ்

Advertisment

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கடைகள் மதியம் வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. அலுவலகங்கள் இயங்குவது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது.இந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிகள், ராயபுரம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை, தங்கசாலை மேம்பாலம், மின்ட் தெரு, கொருக்குப்பேட்டை மேம்பாலம், தி.நகர் ஆகிய இடங்களில் நாம் புகைப்படங்கள் எடுக்கச் சென்றோம். இந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல், வாகனங்கள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கு அறிவிப்பை மீறி வரும் வாகனங்களை போலீசார், வாகன சோதனையின்போது மடக்கி வானங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

Chennai corona virus issue lockdown
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe