Advertisment

சென்னையில் இன்று தீவிர முழு ஊரடங்கு உத்தரவு... சாலையில் வரும் வாகனங்கள் பறிமுதல் (படங்கள்)

Advertisment

கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 12 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும்.இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 19ஆம் தேதி அதிகாலை ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கடந்த 19ஆம் தேதி மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருந்தன. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட்டன. அரசு வாகனங்கள், மருந்து, மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனங்கள் மட்டுமே இயங்கின. 2-வது நாளான 20ஆம் தேதி ஒரு சில வாகனங்களே சாலைகளில் சென்றன. சனிக்கிழமை என்பதால் பல தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விடுப்பு விடப்பட்டதால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தேவையின்றி வெளியில் வரும் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

issue corona virus Chennai Police lockdown Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe