nalini

Advertisment

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி 26 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நளினியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisment

இந்தநிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நளினி வழக்கு தொடர்ந்தார்.