Advertisment

சென்னை முழு ஊரடங்கு - வெறிச்சோடிய முக்கியச் சாலைகள் (படங்கள்)

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடந்த மாதத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

Advertisment

அதேபோல் ஞாயிற்றுக்கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் கடைப்பிடிக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் குழுக்களாக உள்ளனர். இந்த ஊரடங்கில் இருசக்கர வாகனம், கார்களில் காரணமில்லாமல் வெளியே வர வேண்டாம் என முன்னதாகவே கேட்டுக்கொண்டதால் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisment

மேலே படங்களில் உள்ள இடங்கள்: பெரம்பூர் ரயில் நிலையம், திருமங்கலம் எஸ்டேட் சாலை, அயனாவரம், மேடவாக்கம் குளச்சாலை மற்றும் கொன்னூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, அயனாவரம் ஆண்டர்சன் சாலை, மூலக் கடை.

Chennai lockdown pictures
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe