கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை (05/05/2020) உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர்/ செயலர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.