சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர்/ செயலர், சென்னை மண்டல வாரியான சிறப்பு அதிகாரிகள் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.