Advertisment

தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509-பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3, 839-ஆக உயர்ந்துள்ளது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய இடங்களில் வார்டுகள் இன்று நிரம்பி வழிகின்ற நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்ப்பதற்காக ஐம்பதற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் காலை முதல் மாலை வரை வரிசையில் காத்துக்கிடக்கின்றன. நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே படுத்திருந்தனர்.