சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

bus strike

ஜூன் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது, வரவு வைக்கப்படாதது குறித்து அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்ற காரணங்களால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அம்பத்தூர், அண்ணா நகர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் பேருந்துகளை எடுக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வடபழனி, அண்ணாநகர், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது.

Advertisment

சில பணிமனைகளிலிருந்து மட்டும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் கிண்டி, டி. நகர் பணிமனையிலிருந்து குறைவான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஐயப்பன்தாங்கல் பணிமனையில் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.