துபாய் நாட்டில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக பேருந்து மூலம் கரோனா சிறப்பு வார்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.