Advertisment

சி.பி.எஸ்.இ. மறுதேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!

கேள்வித்தாள் லீக் ஆன நிலையில் மறுதேர்வுக்கான தேதிகளை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Advertisment

CBSE

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இந்தத் தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு பாடங்களுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதாக செய்திகள் வெளியாகின.

Advertisment

முதலில் கேள்வித்தாள் லீக் ஆனதாக வெளியான செய்தியை சி.பி.எஸ்.இ. மறுத்திருந்தாலும், பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதவியல் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான தேதிகளை இன்று கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப்அறிவித்துள்ளார். அதன்படி, 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும். 10ஆம் வகுப்பு கணிதவியலுக்கான கேள்வித்தாள் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும் லீக் ஆனதால், அங்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி குறித்த அறிவிப்பு 15 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exam paper leaked cbse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe