CBSE General exam starts today

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சி.பி.எஸ்.இ. சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. அதில், “10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10 வரை நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் வெளியிட்டிருந்த அட்டவணைப்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (15.02.2024) தொடங்குகிறது. இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 877 மையங்களில் 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

Advertisment

மேலும் தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.