Skip to main content

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்ஆப்பில் லீக் ஆனது!

Published on 15/03/2018 | Edited on 15/03/2018

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கணக்குப்பதிவியல் துறைக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்ஆப் வழியாக கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

CBSE

 

சி.பி.எஸ்.இ.  12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் துறைக்கான தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாலை முதல் வாட்ஸ் ஆப் வழியாக வெளியிடப்பட்டு, பகிரப்பட்டுள்ளது. டெல்லி மாநில முதல்வரும், அம்மாநில கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா இந்த விவகாரத்தை உறுதி செய்துள்ளார். மேலும், வினாத்தாள்களை லீக் செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

இன்று காலை தேர்வுகள் தொடங்கிய நிலையில் அந்த வினாத்தாள்களில் செட் - 2 உடன் லீக் ஆன வினாத்தாள் ஒத்துப்போனதாக தகவல் தெரிவிக்கிறது. அதுபோக, சி.பி.எஸ்.இ. உயர்மட்டக்குழு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற அறிவிப்பும் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்