காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், அதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஏப்ரல் 2ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் முத்துக்கருப்பன். இந்தநிலையில் இன்று காலை துணை ஜனாதிபதிக்கு தான் அளிக்க உள்ள ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.