Advertisment

காவிரி வழக்கில் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு வாபஸ்

cauvery

Advertisment

காவிரி வழக்கில் கேட்கப்பட்ட இரண்டு வார கால அவசாக மனுவை திரும்ப பெற்றது மத்திய அரசு. தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆலோசனையின் பேரில் மனு திரும்ப பெறப்பட்டுள்ளது.

மே மூன்றாம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல் திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு வார காலஅவகாசம் கேட்டு இன்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

மத்திய அரசின் இந்த செய்கையினால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட மனுவை வாபஸ் பெற்றுள்ளது மத்திய அரசு.

case cauvery high court
இதையும் படியுங்கள்
Subscribe