palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்றார். அங்கு சமுத்திரம் என்ற கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென்று அமைச்சர் விஜயபாஸ்கருடன் டீ குடித்தார். அதற்கான பணத்தையும் அவர் கொடுத்தார்.

Advertisment

எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ. ,எம்.பி. மற்றும் அரசியலில் பிரபலமாகாமல் இருந்த போது வழக்கமாக டீ குடிக்கும் கடைதான் அது.இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அந்த கடைக்காரர் புதிய எவர்சில்வர் டம்ளரில் டீ கொடுத்தார். உடன் வந்த எம்.எல்.ஏ. மற்றும் கட்சிக்காரர்களுக்கு பேப்பர் கப்பில் டீ கொடுத்தார். ஒரு முதல்வர் தன்னோடு தேனீர் அருந்துபவர்களை பாகுபாடு பார்த்ததை கண்டுகொள்ளாமல் இருந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதல்வருடன் பேப்பர் கப்பில் டீ குடித்தவர்கள் தலித் என்றும் கூறப்படுகிறது.இந்த விவகாரம் அரசியலில் பெரும் சூட்டை கிளப்பியுள்ளது.

Advertisment