Skip to main content

மூன்றாவது அணி அமைக்க கேப்டன் தயார் -விஜயபிரபாகரன் 

Published on 03/02/2021 | Edited on 03/02/2021
dddd

அண்ணாவின் 52வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

 

மூன்றாவது அணி அமைக்க கேப்டன் தயாராக உள்ளார். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மூன்றாவது அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை. அமெரிக்காவில் இருந்துகொண்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதே போல கேப்டன் பேசவேண்டும், நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார். அவர் ஏற்கனவே பேச வேண்டிய பல காரியங்களை பேசிவிட்டார்.

 

கேப்டனுடைய உடல்நிலை சரியில்லாததால்  தேமுதிகவின் நிலை தேய்ந்து போகவில்லை, ஒடிந்து போகவில்லை அவர் மீண்டும் வருவார். தேமுதிகவை குறித்து விமர்சனத்துக்கு நாங்கள் பதிலளிக்க விருப்பமில்லை. கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே உங்கள் ஒவ்வொருவருடைய யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

 

சார்ந்த செய்திகள்